ஜனவரி மரம் (January Tree)

ஜனவரி மரம் (January Tree)

      நீதிமானை குறித்து விவிலியத்தில் மரத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். –(சங்கீதம் 1:3)

           மரமானது தன் கனியை தரும் முன் மலர்களை பொழியும் அதைபோலவேதான் இந்த ஜனவரி மரம் என்பது பூக்கும் பிளம் மரம் (ப்ரூனஸ் செராசிஃபெரா) ஆசியாவைச் சேர்ந்த சிரிய, நடுத்தர அலங்காரமரமாகும். தேவன் படைப்பிள் இதுவும் ஓர் அழகு நிறைந்தவையாகவும் மனதை நெகிழவைக்கும் அதன் நிறத்தில் இருந்து தொடங்குகிறேன்.



         பெண்களையும் அதுவும் மிகவும் முக்கியமாக பெண் குழந்தைகளையும் கவரும் இளஞ்சிவப்பு பூக்களையும் கொண்டு ஊதா இலைத்திரள்களோடு எழில் நிறைந்த இடமாக காட்சியளிக்கும். பூக்கும் பிளம் 15-ல் இருந்து 25 அடி உயரம் கொண்டதாய் இருக்கும். இதை விவிலியத்தில் அழகாக குறிப்பிட்டுள்ளனர் அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.”    –(தானியேல் 4:11 )

 பூக்கும் பிளம் சுமார் 20 வருடங்கள் சராசரி ஆயுட்காலமாக கொண்ட ஒரு குறுகிய காலமரமாகும். ஒரு அரசனுக்கு அவனது கிரீடம் எந்த அளவிற்கு அழகையும்மதிப்பையும் மற்றும் கம்பீரத்தையும் தருகிறதோ அதைபோலதான் பூக்கும் மரங்களுக்கும் அதன் மலர்கள் தான் அதன் கீரிடம். பரந்து விரிந்த விருட்சத்தில் உள்ள மலர்கள் கண்களையும் மனதையும் கவரும் வண்ணமாய் இருக்கும். சற்று நேரம் அதன் அழகை காணும்போது மனதினுள் பல வண்ண பட்டாம்பூச்சி சிறகடித்து பரப்பதைப்போல் ஒரு குழந்தையைப்போல் மனம் மாறும். பூக்கும் பிளம் எல்லா வசந்த காலத்தில் தொடங்கி குளிர்காலத்தில் பூத்துக்குலுங்குகிறது.

  
 மனிதனின் காற்றை கொண்டுள்ள நீ
                                                              
   பூமியின் வளத்தை கொண்டுள்ள நீ      
                                                   
 பல யுகங்களை தாண்டியும் நீ நிற்கின்றாய்    
                                
     பூமியின் பல தலைமுறைகளையும் நீ நிற்கின்றாய்  
                    
                                           உன்னை என்னவென்று சொல்                                                 
    ! அன்றும் இன்றும் என்றும் நீ 

மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் 
கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்  . – (எரேமியா 17:8)

                        வாசக பெருமக்களை அருமையான தலைப்போடு அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன்.

    



Comments