“…உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக;” – லேவியராகமம் 19:18
காதல் என்பது ஒரு
உணர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகவே
அமைகின்றது. தந்தைக்கு மகளின் மேல் கொண்ட அன்பு, தாய்க்கு மகன்மேல் கொண்ட அன்பு இவை அனைத்திலும்
மேலான அன்பு இறைவன் நம்மேல் கொண்ட அன்புகாக தான் உயிர்நீத்தார். அந்த அன்புக்கு ஈடு இணையே இல்லை.
இவைகளைப் பார்க்கிலும்
ஒரு குறிப்பிட்ட கால வயதில் வருவதைதான் காதல் என்று கூறுகிறார்கள். இந்த காதலர் தினம் கொண்டாட்டம் என்பது மேற்கத்திய கலாச்சாரம். நம்கலாச்சாரத்திற்கு ஏற்புடையதாக அடைவதில்லை.
பிப்ரவரி மாதம் என்றால்
நம் நினைவிற்கு வருவது பிப்ரவரி -14 (காதலர் தினம்) மகிழ்ச்சியான
நாள் காதலிப்போர்க்கு மட்டும் தான்,
காதலிக்காவர்களுக்கு சற்று
சிக்கலான நாள் தான்.
“பூரணசற்குணத்தின்
கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
– கொலோசெயர் 3:14
நம்மில் பலருக்கு காதலர் தினம் மட்டும் தான் தெரியும், ஆனால் காதலர் எதிர்பு தினம் (Anti – Valentine Day) என்று ஒன்று உள்ளதை நம்மில் பலருக்கு தெரியாது. இவை இரண்டைபற்றியும் இந்த பதிப்பில் காண உள்ளோம்.
மூன்றாம் நூற்றாண்டில் தான் காதலர் தினத்தின் வரலாறு தொடங்குகிறது. கி.பி.270 ரோமாபுரியை ஆண்டுவந்த
இரண்டாம் கிளாடியுஸ் அரசனாக இருந்தார். செயின்ட் வேலன்டைன் அதே ஆட்சி காலத்தில்
பாதிரியார் மற்றும் பிஷப்பாக இருந்தார்.
st-valentine |
கிளாடியஸ் அரசன் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம்
குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். எனவே ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை
இருந்தது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு
அதிரடி உத்தரவை விதித்துள்ளார்.
நம் விவிலியத்தில்
“ஒண்டியாயிருப்பதிலும்
இருவர் கூடியிருப்பது நலம்;…”
– பிரசங்கி 4:9
எனவே தான் இந்த நிலையில் வாலன்டைன் அரசனின் அறிவிப்பை மீறி
இரகசியமாக அனைவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.
“உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.” – I கொரிந்தியர் 16:14
அரச கட்டளையை மீறி நிறைவேற்றினால் என்ன? மரணம்தான்
அதேதான் இங்கும் நிகழ்ந்தது. இதனையறிந்த மன்னன், வாலண்டைனை கைது செய்ததோடு மரண தண்டனையை நிறைவேற்ற நாளும்
நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் வாலண்டைக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த
சிறைக்காவலர் அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தார். அப்போது தான் வாலண்டைன்
அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் மடல் வாழ்த்து அட்டையில் அனுப்பினார். அதே நேரத்தில்
தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்ரவதை செய்த நிலையில் தலை
துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாள் பிப்ரவரி -14ம் நாள்.
இந்த நாளை தான் "வாலண்டைன் தினம்" "காதலர் தினமாக" கொண்டாடி
வருகிறோம்.
இந்நாளில் காதலர்
தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது ஒரு மரபாக இருந்து வருகிறது.
காதலர் வீக் (அ)
காதலர் வாரம் என்றும் அழைக்கலாம் பிப்ரவரி மாதம் 7-ம் தேதியை இனிய ரோஜா தினம் (Rose Day) எனவும், 8-ம் தேதியை (Propose Day) எனவும், 9-ம் தேதியை
சாக்லேட் தினம் (Chocolate Day) எனவும், 10-ம் தேதியை
இனிய டேடி தினம் (Teddy Day) எனவும், 11-ம் தேதி
வாக்குறுதி நாள் (Happy Promise Day) எனவும், 12-ம் தேதியை
(Happy Hug Day) எனவும்,
13-ம் தேதியை
முத்த தினம் (Kiss Day) எனவும்,14-ம் தேதியை காதலர்
தினம் (Valentine’s Day) என்று இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
பத்தொன்பதாம்
நூற்றாண்டு முதல் கையால் எழுதப்படும் குறிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்ட
வாழ்த்து அட்டைகளாக இருந்தது. அதேபோல இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு
நாகரீகமாக இருந்தது.
“குணசாலியான
ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்?...” – நீதிமொழிகள் 31:10
ஸ்வீடன் நாட்டில்
இந்நாளை "அனைத்து இதயங்களின் தினம்" என்று அழைக்கின்றனர். கௌதமாலாவில்
வாலண்டைன் தினம் "Dia del Amor yla Amistad" (காதல் மற்றும் நட்பு தினம்) என்று அழைக்கப்படுகிறது. தென்
அமெரிக்காவில் இந்த நாளை Amigo Secreto "ரகசிய
நண்பன்" என்றே கொண்டாடப்படுகிறது.
“சிநேகிதன் எல்லாக்
காலத்திலும் சிநேகிப்பான்;” –
நீதிமொழிகள் 17: 17
அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில்
வழக்கமாக ஆண்களும் பெண்களும் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்கிறார்கள், பரிசளிப்பது
என்பது இன்றுவரை நீடித்துக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் காதலுக்கும் மிக நெருங்கிய பந்தம் உண்டு என்ன
வென்றால் இந்தியாவில் தான் காதல் சின்னம் என்று கருதுகிற "தாஜ்மஹால்"
இருக்கிறது. நமது இந்திய இலக்கியத்திலும் அதுவும் முக்கியமாக தமிழ் இலக்கியத்தில்
காதல்மைய இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 2001-ஆம்
ஆண்டில் இருந்து தான் கடைக்காரர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாலண்டைன் சம்பந்தப்பட்ட
பொருட்களை விற்கின்றனர்.
இப்போது நாம் காதலர் தினம் அதன் வரலாறு பற்றி பார்த்தோம்
அதேபோல் காதலர் எதிர்ப்பு தினம் (Anti – Valentine Day) பற்றி
அவை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி பார்போம்.
காதலர் எதிப்பு தினங்கள் தொடங்கும் தேதி பிப்ரவரி 15-ம்
இன்நாளை சிலாப் டே (Slap Day) எனவும், 16-ம் தேதி
கிக் தினம் (Kick Day) எனவும்
கொண்டாடப்படுகிறது. "வார்த்தைகளை விட நாம் செய்யும் செயல் பேசும்" என்று
௬றுவார்கள். காதலை எதிர்ப்பவர்கள் தங்கள் செயலை இவ்வாறு செய்கின்றனர். 17-ம் தேதியை
வாசனை தினம் (Perfume Day) எனவும்,
18-ம் தேதியை
காதலிப்பது போல் நடிக்கும் தினம் (Flirting Day) என்வும், 19-ம் தேதி
வாக்கு மூலம் நாள் (Confession Day) எனவும், 20-ம் தேதி
காணாமல் போன நாள் (Missing Day) எனவும், 21-ம் தேதி
பிரிந்து செல்லும் நாள் (Breakup Day) என்று காதலர்
எதிர்ப்பு தினங்களை கொண்டாடுகின்றனர்.
"…விசுவாசம், நம்பிக்கை, அன்பு
இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. " – I கொரிந்தியர் 13:13
அன்பான வாலிப வாசகர்களே அன்பின் பந்தத்திற்கு செல்வதற்கு வயதும், காலமும் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் இருந்தால் தேவனால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்போம்.
"உனக்கு ஏற்ற நேரத்தில்
ஏற்ற துணையை நான் உனக்கு தருவேன்"
Comments