பெண்ணின் நாற்பண்புகள்
பெண் என்றாலே அழகு இதைதவிர இந்த உலகம் வேறு எதையும் கண்டதில்லையா அல்லது காண தவரியதா.
ஆனால் நம் விவிலியத்தில் அழகு வீண் என்றே தான் கூறுகிறார்கள்.
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
கர்த்தருக்குப் பயப்படுகிற
ஸ்திரீயே புகழப்படுவாள். -நீதிமொழிகள் 31:30
பெண்னை இந்த உலகம் எவ்வாறு கண்ணோக்கி பார்க்கிறது
என்று ஒரு மிக சிறு பார்வை. சங்ககால தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் வயதை எழு பருவங்களாக
வரையறுத்து வைத்துள்ளனர்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
மொழிகள் எத்தனையோ உண்டு அவை
அனைத்திலும் பெண்ணை போற்றா மொழி உண்டோ! மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும்
கூறும் கருத்துக்கள் ஒன்றாக தான் உள்ளது. கவிஞர்களே! என் கருத்தை தவராக எண்ணாதீர்கள் பெண்ணை வர்ணிக்கும் விதம் வஞ்சப்புகழ்ச்சி அணி -யாக தான் உள்ளது.
எல்லா மொழி கவிஞர்களும் இதைத்தான் செய்கின்றனர். கவிஞர்கள் என்று கூறினால் பாரதியை
பற்றி பேசாமல் இருக்க முடியாது.பெண் விடுதலை,
பெண்ணின் பெருமை, பெண்ணின் வீரம் என்று அனைத்திலும் தன் கவித்திறமையால் கூறியுள்ளார்.
இதில் எனக்கு பிடித்தமானது.
பெண்ணின் நடை:-
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட
பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்...
பெண்ணின் நடையை பாரதி கூறியிருப்பார். தற்போதைய
நடைமுறை வாழ்வில் இவ்வாறு ஒரு பெண் இருந்தால் அந்த பெண்ணுக்கு தீமிர்பிடித்தவள் என்றே
பெயர் பாரதி!. நீ இங்கு இல்லாமல் போய்விட்டாய். இது ஒரு பெண்ணின் கூக்குரல்.
அச்சம்:-
யாருக்கும் அஞ்சோம் எதற்கும்
அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும்
அஞ்சோம்!
என்று
ரொத்திரம் கற்றுக்கொடுத்தாயே பாரதி. இன்னும் பல பெண்களின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள்ளே
முடங்கியுள்ளது.
என்னடா பொல்லாத வாழ்க்கை என்றே தான் எண்ணம் தோன்றுகிறது.
ஆனால் நாற்பண்புகளில் இதைபற்றி கூறவில்லை. நம் முன்னோற்கள் அச்சம் கொள்ளவேண்டியவற்றிற்கு
மட்டும் அச்சம் கொள்ளவேண்டும். அதாவது களவு செய்ய, பொய் சொல்ல, தன் ஒழுக்க நிலையில் தவறுவது.
நம் விவிலியத்தில்
நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக்
காப்பாள்; … -
நீதிமொழிகள் 11:16
இதையெல்லாம் தான் ஒரு பெண்ணானவள் செய்ய அச்சம் கொள்ள
வேண்டும். என்றே நம் முன்னோற்கள் கூறுகிறார்கள்.
மடம்:-
என் சிறுவயதில்
அச்சம் மற்றும் நாணம் இவை இரண்டிற்கு மட்டும் தான் அர்த்தம் தெரிந்தது. மடம் சற்று
விளக்க வேண்டியுள்ளது. மடம் என்றும் மடமை என்றும் பொருள். அதாவது பெரியோர், பெற்றோர் மற்றும் கணவர் ஆகியோர் காட்டும் வழியில் தவறாமல் நடப்பது.
சுயபுத்திக்கு வேலையில்லையாம்
சொல் புத்திக்கு தான் வேலை...
சரி இவ்வாறு வைத்துக்கொள்வோம்.
கணவன் குடிகாரன் தன் இரண்டு மகள்களை படிக்க
வைக்க அவள் என்ன செய்வால்? தன் சுயபுத்தியில் தான் நீர்க்கவேண்டும்.
ஐயா! மூத்தோர்களே நான் விடந்தாவாதம் பேசும் பெண்ணையோ! அல்லது பிடிவாதகாரியான
பொண்ணையோ! சொல்லவில்லை. சில குடும்பங்கள் பெண்ணின் சுய புத்தியில் தான் வாழ்கிறது.
நம் விவிலியத்தில்
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; -நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; -நீதிமொழிகள் 14:1
நாணம்:-
நாணம்
என்பதைவிட வெட்கம்...ம்ம்ம்... இன்னும் இந்த உலகில் உள்ள சில ஆண்கள் சரியான பெண்ணை
பார்த்ததில்லை என்று கூறலாம்.
யாரோ சொன்னார்கள்
ஒரு பெண்ணுக்கு ஆணை கண்டதும் வெட்கம் வந்துவிடுமாம். ஆம்... தன்னவரை கண்டால் மட்டும்
தான். பார்க்கும் அத்தனை ஆண்கனள கண்டதும் வெட்கம் வந்தால் அதற்க்கு வேறு பெயர் உண்டு.
ஒரு சரியான தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த பெண் “என்நிலையிலும் தன் நிலை மறவாதிருத்தல்
நன்று" என்றே என்பதை அவள்
நன்கு அறிவால்.
பெண்ணானவல் இந்த நாற்பண்புகளை கொண்டால் தான் அவள்
முழுமை அடைகிறால் என்பதை தான் என்னால் ஏற்க முடியவில்லை. ஏன்? என்று பல எண்ணங்கள் என்னிடம்
தோன்றியது. அதனை பற்றிய ஒரு சிறு ஆய்வு.
பெண்களின் நாற்பண்புகள் எங்கிருந்து வந்தது என்று
கேட்டால் தமிழ் அறிஞர்கள் தொல்காபியத்தைக் கைக்காட்டு கின்றனர்.
பயிர்ப்பு:-
பயிர்ப்பு
என்ற வார்த்தை புதிதான சொல்லாகவே உள்ளது. மதுரை தமிழ் பேரகராதி, கழகத் தமிழ் அகராதி,
செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி - ஆகிய 4 அகராதிகலும் ஒன்றுபோல இச்சொல்லுக்கு கொடுக்கப்பட்ட
அர்த்தம் "அருவருப்பு".
தொல்காப்பியத்தில் உள்ள
'அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
அச்சமும்
பெண்பாற் குரிய என்ப’
பெண்பாற் குரிய என்ப’
தொல்காப்பியர்
வரையறுத்தது இந்த 3 குணங்களை மட்டும்தான்
பயிர்ப்பு என்ற சொல் பிற்காலத்தில் வந்த சேர்க்கை தொல்காப்பியத்திலே மேற்கூறிய வரையரையானது
அதன் ‘களவியல்’ பகுதியிலே 96-ஆவது வரியில் இருந்து துவங்க
கூடியதாக உள்ளது.
மனது ஒருமித்த காதலர்கள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பிறர் அறியாமல் தனி இடத்தில்
கூடி இன்பமாக இருப்பது என்ற நிலையே களவியல் ஆகும். அப்படி கூடும் இடத்திற்கு
‘குறி’என்று பெயர். சங்க இலக்கியத்தில் பகலில்
கூடும் இடம் ‘பகற்குறி’ இரவில் கூடும் இடம் ‘இரவுக்குறி’என்று கூறுவர். தலைவியானவள் தலைவனுடன் தனியே
இருக்கும் போது அவளுக்கு மனதின் உள்ளே உருவாகக் கூடிய
அச்சம் ( பிறர் பார்த்தால் என்ன ஆகும்
என்ற மனநடுக்கம் )
மடம் ( என்ன ஆனாலும் சரி
என்று தலைவனின் ஆசைக்குத் துணை நிற்கும் அறிவற்றதனம் )
நாணம் ( தலைவனை அனுமதித்த
பின்னர் அவனது செயல்களால் வரும் வெட்கம் ) ஆகியவற்றையே தொல்காப்பியர்
அச்சம், மடம், மற்றும் நாணம் என்று மூன்றாக வகுத்தார்.
திருமணத்திற்கு
முன் தொடும்போது பெண் அதனை அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும்? அவள் அவனது தொடுகையை அருவருப்பாக அல்லவா பார்க்க வேண்டும்? என்று எண்ணிப் பின்னர் சேர்த்ததே ‘பயிர்ப்பு’ இதனை ஆண்கள் புரிந்துகொள்வது
கடினம் தான். என்ன செய்ய இதுதான் உன்மை.
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு
அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி;
அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு
அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
- 1 கொரிந்தியர்
7:4
ஆக என் சிறு ஆய்வின்படி இந்த நான்கு பண்புகளும்
ஒரு பெண்ணுக்கு தன் கணவனிடமே சார்ந்த ஒன்றாக உள்ளது.
Comments