ஏன்?
கருப்புக்கு மட்டும் இந்த நிலை என்று எனக்கு புரியவில்லை. வண்ணங்கள் பல உண்டு இருப்பினும் கருப்பை மட்டும் நான் வெறுப்பதற்கு காரணம், நான் கருப்பாக பிறந்தேன் என்பதா?
ஏன்?
என் நிறத்தை நான் வெறுக்கிறேன் நேசிப்பதற்கு பதில் காரணம் தேடியபோது பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் பல கேல்விகளே கிடைத்தது.
ஏன்?
என் பெற்றோர்களுக்கும், சகோதர மற்றும் சகோதிரிகளுக்கும் என் நிறத்தை பிடிக்கவில்லையா, இல்லையேல் என் நிறத்தால் என்னை பிடிக்கவில்லையா? எனக்கென்று பல நண்பர்கள் மற்றும் தோழிகள் இருப்பினும் அவர்கள் என் நிறத்தைவைத்து என் மனதை காயப்படுத்திய நாட்கள் அதிகம்...
ஏன்?
இந்த கருப்பு நிறத்திற்கு, ஏன் இந்த அவலநிலை...
காரணம் மட்டும், விலங்கவில்லை...
யாரையும் குறைகூறவும், விருப்பமில்லை...
ஆனாலும் மனதில், அமைதியில்லை...
திறமைகள் இருந்தும் நான் கருப்பாக இருக்கிறேன் என்பதற்காகவே பல வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டது. சொல்லிலும், செயலிலும் மற்றும் ஒழுக்கத்திலும் நிலைபெயராமல் நிலையாக இருந்த போதிலும் குறைகூர காரணம் தேடுபவர்களுக்கு, நான் சரியாக இருப்பதினால் என் நிறத்தையே குறைகூறுகிறார்கள். என்னடா இது? என்று எனக்குள் ஒரு சலிப்பான எண்ண அலைகள் உருவாவது உண்டு. கூறுவார்கள் "எல்லாம் கடந்து போகும்" என்று ஆனால் இந்த நிறத்தை வைத்து கிடைக்கும் அவமானங்களும் வேதனைகளும் என்னை இன்னும் பின்தொடர்ந்து தான் வந்துகொண்டுள்ளது.
எனக்குள் ஒர் எண்ணம் நீ எதைபார்த்து பயந்து ஒடுகிறாயோ அது உன்னை பின்தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். நான் என்னை நிலைபடுத்திக்கொண்டேன். நான் ஏற்றுக்கொண்டேன் "நான் கருப்புதான்" அதனால் என்னை ஒரு போதும் நான் வெறுக்கபோவதில்லை.
நான் ஏன்? மற்றவர்கள் என்னை நேசிக்கவேண்டும் என்று எண்ணுகிறேன் என்ற எதிர்பார்பை நிறுத்திவிட்டு. என்னை நானே காதல் செய்ய ஆரம்பித்துவிட்டேன் பின்னர்தான் எனக்கே தெரிந்தது நான் எவ்வளவு அழகு என்று. அழகு நிறத்தை பொருத்து அல்ல உன் அகத்தை பொருத்தது. என் அகம் எப்போதும் அழகானதுதான் என்ற நேர்மறை எண்ணம் எப்போது என்னுள் வந்ததோ அப்போழுதே என்னை பின்தொடர்ந்த எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் என்னை விட்டுவிலகிவிட்டார்கள்.
நான் என் நிறத்தை ஏற்றுக்கொண்டநாள் முதல்
என் கருமை நிறத்துடன்...
என் நிமிர்ந்த நன்னடையுடன்...
என் திமிர் கொண்ட பார்வையுடன்...
என் புன்னகைத்த முகத்துடன்...
நான்...
யாராக இருந்தாலும் மற்றவர்களுக்குள் இருக்கும் குறைகளை முதன்மைபடுத்துவார்கள்.
அதைபார்த்து ஓடாமல் உங்களில் உள்ள குறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலே போதும் வாழ்க்கை வசந்தம்தான். குறைகளை ஏற்றுக்கொள்ளும் நேர்மறை எண்ணம் உங்களுக்குள் வந்தாலே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.
இதனை என் தோழிக்கு சமர்பனம்.
Comments
Nice story sister .....